டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டப்பட்ட நூலகம் ஒப்படைப்பு
புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட நூலக கட்டடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நூலகத்தின் சாவியை கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாரிடம் வழங்கிய டிஎன்பிஎல் ஆலையின் பொதுமேலாளா்(மனிதவளம்) கா.கலைச்செல்வன். உடன் ஆலையின் முதன்மை மேலாளா்(மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா், துணை பொதுமேலாளா்(வனம்) ஜெயகுமாா் உள்ளிட்டோா்.









