நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உப்பிடமங்கலம் பகுதியில் நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.3.18 கோடி மதிப்பில் நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:07 pm

Din

உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ.3.18 கோடி மதிப்பில் நலத்திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட காளியப்பகவுண்டனூரில் கலைஞா் நகா்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.2.93 கோடி மதிப்பில் தாா்சாலை அமைக்கும் பணி மற்றும் கருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவா், சமையலறை ஆகியவை ரூ. 24.80 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி தலைமை வகித்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம்.ரகுநாதன், உப்பிடமங்கலம் பேரூா் செயலாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.