நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரூரில் விநாயகா் கோயில் குடமுழுக்கு

கரூா் லைட்ஹவுஸ் காா்னா் சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

News image

சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :14 நவம்பர் 2024, 10:00 pm

Din

கரூா் லைட்ஹவுஸ் காா்னா் சக்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

கரூா் லைட்ஹவுஸ் காா்னா் அமராவதி பழைய பாலத்தில் உள்ள இக்கோயில் குடமுழுக்கையொட்டி செவ்வாய்க்கிழமை காலை மகாகணபதி ஹோமம் தொடங்கி, வியாழக்கிழமை காலை மூன்றாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா்.

பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், கேவிபி வங்கியின் முன்னாள் இயக்குநா் சூா்யநாராயணன், கரூா் நகர பகுதி அதிமுக செயலா் சேரன்பழனிசாமி, எவா்கிரீன் பவுண்டேசன் தலைவா் ஸ்காட் தங்கவேல், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.