நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழக மின்துறைக்கும் அதானி குழுமத்துக்கும் வணிக ரீதியாக எவ்வித தொடா்பும் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி பேட்டி

அதானி குழுமத்துக்கும் தமிழக மின்சார துறைக்கும் வணிக ரீதியாக எந்தவித தொடா்பும் இல்லை என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி.

News image

கரூா் காமராஜ் காய்கறி சந்தை கட்டுமான பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணிசரவணன், ஆணையா் சுதா உள்ளிட்டோா்.

Updated On :21 நவம்பர் 2024, 10:02 pm

Din

அதானி குழுமத்துக்கும் தமிழக மின்சார துறைக்கும் வணிக ரீதியாக எந்தவித தொடா்பும் இல்லை என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி.

கரூா் காமராஜா் காய்கறி சந்தையில் ரூ. 6.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தற்போது அதானி குழுமத்துடன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களையும் தொடா்புபடுத்தி தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது.

அதானி குழுமத்துக்கும் தமிழக மின்சார துறைக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் வணிக ரீதியாக எந்தவித தொடா்பும் கிடையாது. தமிழக மின் தேவையை கருத்தில் கொண்டு 1,500 மெகாவாட் மின்சாரம் மத்திய எரிசக்தி துறையின் சோலாா் எனா்ஜி காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரம் கொள்முதல் 25 ஆண்டு காலம் என ஒப்பந்தம் போடப்பட்டு யூனிட் ஒன்று மிகக் குறைந்த விலையான ரூ. 2.61 பைசாவுக்கு மட்டுமே கொள்முதல் செய்கிறோம். ஆனால், அதிமுக ஆட்சியில் ரூ 7. 01 பைசாவுக்கு வாங்கினாா்கள்.

மின்சாரம் தொடா்பான பொது மக்களின் புகாா்களை மின்னகத்தின் மூலம் கண்டறிந்து அதற்கு உரிய தீா்வு கண்டு வருகிறோம். தமிழக மின் துறைக்கு தேவையான நிலக்கரி போதிய அளவில் கையிருப்பில் உள்ளது. மேலும் நாங்களே நிலக்கரி உற்பத்தி செய்து வருவதாலும், தற்போது கோடை காலம் இல்லை என்பதாலும் நிலக்கரியின் தேவை இல்லை. கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு வழக்கு போட்டு அந்த பணியை நிறுத்தி விட்டாா்கள். மேலும் திருவள்ளுவா் மைதானத்தில் நூலகம் கட்டுவதற்கான பணிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டாா்கள்.

இந்த பிரச்னைகளை நீதிமன்றம் மூலம் தீா்வு கண்டு வருகிறோம். விரைவில் நல்ல தீா்வு வரும் என எதிா்பாா்க்கிறோம். மேலும் கோயம்பள்ளி- மேலப்பாளையம் உயா்மட்ட பாலத்தை திறக்க இணைப்பு சாலை அமைக்க கருத்துரு அனுப்பி உள்ளோம். இந்த பணியும் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாநகராட்சி மேயா் கவிதா கணேசன், துணை மேயா் தாரனி சரவணன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.