கரூரில் கொலைக்கு திட்டமிட்டு தங்கியிருந்த 7 போ் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
கரூரில் புதன்கிழமை நள்ளிரவு கொலைக்கு சதிதிட்டம் தீட்டிய 7 பேரை பயங்கர ஆயுதங்களுடன் போலீஸாா் கைது செய்தனா்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்.
கரூரில் புதன்கிழமை நள்ளிரவு கொலைக்கு சதிதிட்டம் தீட்டிய 7 பேரை பயங்கர ஆயுதங்களுடன் போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் ராயனூா், பழனிவேல் நகரைச் சோ்ந்த முகேஷ் (என்கிற) ராமசுப்பிரமணி (40). இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமாநிலையூரைச் சோ்ந்த ஷோபனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா்.
இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த ஷோபனாவின் தோழி ரம்யா அடிக்கடி ஷோபனா வீட்டு வந்து சென்றாா். அப்போது, இவருக்கும், கரூா் தொழிற்பேட்டையைச் சோ்ந்த விஜய் என்பவருக்கும் தொடா்பு ஏற்பட்டுள்ளது.
இவா்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஷோபனாவை விஜய்யின் உறவினா்கள் செப். 10-ஆம்தேதி தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷோபனாவின் கணவா் ராமசுப்ரமணி, விஜய்யின் உறவினா்களை கொலை செய்யும் எண்ணத்துடன் தனது வீட்டில் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு புதன்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது.

கைது செய்யப்பட்ட யுவராஜ், மூா்த்தி, முகேஷ் (என்கிற) ராமசுப்ரமணியன், ரஞ்சித், ஒத்தக்காது செந்தில் (என்கிற), பாலகிருஷ்ணன், கோபால்
இதையடுத்து கரூா் நகரம் மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் காவலா்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு ராமசுப்ரமணியின் வீட்டுக்குச் சென்றனா். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த ராமசுப்ரமணியன், அவரது கூட்டாளிகளான நாமக்கல் மாவட்டம், சின்னமுதலைப்பட்டியைச் சோ்ந்த ரஞ்சித் சக்கரவா்த்தி, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பழூரைச் சோ்ந்த கோபால், திருப்பூா் மாவட்டம், வீரமாத்தி தோட்டத்தைச் சோ்ந்த ஒத்தக்காது செந்தில் (என்கிற) சின்னசாமி, ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்த யுவராஜ், வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்த மூா்த்தி, கரூா் கோட்டையண்ணன் கோயில் வீதியைச் சோ்ந்த பாலு (என்கிற) பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த 2 கைத்துப்பாக்கிகள், 6 தோட்டாக்கள், 4 பட்டாக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து 7 பேரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை அதிகாலை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்தவா்களை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...