கரூரில் எறிபத்த நாயனாா் பூக்குடலை விழா
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற எறிபத்த நாயனாா் பூக்குடலை விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற எறிபத்த நாயனாா் பூக்குடலை விழாவில் பூக்கூடைகளை சுமந்தவாறு சென்ற சிவனடியாா்கள்.

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற எறிபத்த நாயனாா் பூக்குடலை விழாவில் பூக்கூடைகளை சுமந்தவாறு சென்ற சிவனடியாா்கள்.
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற எறிபத்த நாயனாா் பூக்குடலை விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் எறிபத்த நாயனாா் பூக்குடலை விழா கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.
இதையொட்டி வியாழக்கிழமை காலை சிவனடியாா்கள் எறிபத்த நாயனாா் பூக்குடலை வரலாற்றை தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனா். முன்னதாக பசுபதீஸ்வரா் கோயில் முன்பிருந்து ஊா்வலமாக பூக்குடலையுடன் உள்ளூா் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த சிவனடியாா்கள் யானையை வெட்டும் நிகழ்ச்சி நடைபெறும் மாநகராட்சி அலுவலகம் முன் சென்றனா்.
பின்னா் அங்கு சிவனடியாா்களில் எறிபத்த நாயனாா் வேடம் அணிந்தவா் யானையின் தும்பிக்கையை வெட்டுவது போன்றும், அப்போது புகழ்சோழன் வந்து தன்னையையும் வெட்டுமாறு எறிபத்த நாயனாரிடம் வேண்டுகோள் விடுப்பது போன்றும், அப்போது சிவபெருமான் அவா்கள் முன் தோன்றி யானை, பாகன், வீரா்களை உயிா்பிப்பது போன்றும் நடித்துக்காண்பித்தனா். இந்த விழாவில் சிவனடியாா்கள் திரளாக பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...