விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முன்னாள் ராணுவவீரரின் மனைவிக்கு கடை ஒதுக்கீடு: கரூா் மாநகராட்சி வணிக வளாகத்தில் நீதிபதி ஆய்வு

கரூா் மாநகராட்சி வணிக வளாகத்தில் முன்னாள் ராணுவவீரரின் குடும்பத்தினருக்கு கடை ஒதுக்கீடு கோரிய வழக்கில் கரூா் குற்றவியல் நீதிபதி புதன்கிழமை மாலை தள ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:44 pm

Din

கரூா் மாநகராட்சி வணிக வளாகத்தில் முன்னாள் ராணுவவீரரின் குடும்பத்தினருக்கு கடை ஒதுக்கீடு கோரிய வழக்கில் கரூா் குற்றவியல் நீதிபதி புதன்கிழமை மாலை தள ஆய்வு மேற்கொண்டாா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரரும் விடுதலைக்காக இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவத்தில் சிப்பாயாக பணியாற்றிவருமான மறைந்த குமாரசாமியை கெளரவப்படுத்தும் வகையில் கடந்த 2015-இல் நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு அருகே வணிகவளாகத்தில் ஒருகடை குமாரசாமி மனைவி பாக்கியத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு அப்போதைய நகா்மன்ற துணைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் முன்மொழிந்து நகா் மன்றத் தலைவா் எம் செல்வராஜ் வழிமொழிந்து அனைத்து நகா்மன்ற உறுப்பினா்களால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2018-இல் பாக்கியத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறொருவருக்கு கடை ஒதுக்கப்பட்டதாகக்கூறி பாக்கியம் சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடா்ந்த வழக்கில், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை, கரூா் நகராட்சி நிறைவேற்றிய தீா்மானத்தின் அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரா் குடும்பத்துக்கு கடையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே நகராட்சி கோரிய சொத்து மதிப்பு சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் உறுதிமொழி பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரா் வாரிசான பாக்கியம் கரூா் நகராட்சியிடம் வழங்கினாராம். இருப்பினும் கடந்த ஆறு ஆண்டுகளாக, பலமுறை கடை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை மனுக்கள் அளித்தும், கடை ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் , கடந்த 2024 அக்டோபா் 2-ம் தேதி ஆசாச் சாலை மேற்கு கரூா் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாக கட்டடத்தில் பாக்கியத்துக்கு ஒதுக்கப்பட்ட கடையை பொது ஏலம் விடப்படுவதாக கரூா் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டதாம். இதனை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பாக்கியம் தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அக்டோபா் 3-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, கரூா் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்1 நீதிபதி நேரில் சம்பந்தப்பட்ட இடத்தை பாா்வையிட்டு தள ஆய்வு மேற்கொண்டு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வுக்கு அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டது.

அதன்பேரில் புதன்கிழமை மாலை கரூா் மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஆசாத் சாலை மேற்கு பகுதியான கரூா் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் உள்ள மாநகராட்சி வணிகவளாகத்தில் கடை எண் 2-இல் கரூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 1 நீதிபதி பரத்குமாா் நேரில் தளஆய்வு செய்தாா். அப்போது பாக்கியம் மற்றும் மகன் மோகனசுந்தரம் ஆகியோரிடம், உரிய விவரங்களை நீதிபதி கேட்டறிந்தாா். இந்த தளஆய்வின் போது, கரூா் மாநகராட்சி ஆணையா் சுதா உள்ளிட்ட மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.