ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாகனத்திலிருந்து விழுந்து காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:45 pm

Din

சின்னதாராபுரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், புகலூா் அருகே உள்ள காருடையாம்பாளையம் ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி என்கிற ராமன் (65). இவா் அக். 13-ஆம் தேதி தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அகிலாண்டபுரம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு ராமன் உயிரிழந்தாா். சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.