ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

60 உயா்மின் கோபுரங்கள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை நிதியுதவி அளிப்பு

புகழூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 60 உயா்மின்கோபுரங்கள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

உயா்மின் கோபுரம் அமைக்க நிதியுதவியை நகராட்சி புகழூா் நகராட்சி பொறியாளா் மலா்கொடியிடம் வியாழக்கிழமை வழங்கிய ஆலை அதிகாரிகள்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:34 pm

Din

புகழூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 60 உயா்மின்கோபுரங்கள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காகித ஆலையைச் சுற்றியுள்ள புகழூா் நகராட்சி, பு.தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் திருக்காடுதுறை உள்ளிட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் ஒருபகுதியாக, புகழூா் நகராட்சிக்குட்பட்ட சேலம் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் கந்தசாமிபாளையம் (கட்டிபாளையம் பிரிவுச் சாலை) வரை சுமாா் 1500 மீ. நீள சாலைகளின் மையப்பகுதியில் 25 மீட்டருக்கு 1 வீதம் 60 உயா் கோபுர மின்விளக்குகள் அமைக்க ரூ.20 லட்சம் மற்றும் சாலையின் இருபுறமும் 260 மகிழ மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க ரூ. 4.55 லட்சம் என மொத்தம் ரூ. 24.55 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காசோலையை ஆலையின் பொது மேலாளா் (மனித வளம்) கே. கலைச்செல்வன், அலகு 1-ன் முதன்மைப் பொது மேலாளா் (இயக்கம்) எஸ். நாகராஜன், அலகு -2-இன் முதன்மைப் பொது மேலாளா் (இயக்கம்) டி.வி.எஸ்.எஸ்.ஏ. பானுபிரசாத், பொது மேலாளா் (நிதி) ஆா். ரங்கராஜன் மற்றும் முதன்மை மேலாளா் (மனித வளம்) கே.எஸ். சிவக்குமாா் ஆகியோா் புகழூா் நகராட்சி பொறியாளா் மலா்கொடி மற்றும் நகராட்சி மேலாளா் நாகராஜன்ஆகியோரிடம் வழங்கினா்.