ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரவக்குறிச்சியில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: மூவா் காயம்

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட மூவா் காயமடைந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:50 pm

Din

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட மூவா் காயமடைந்தாா்.

அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கான் சுங்கச்சாவடி சாா்பில் தேசிய நெடுஞ்சாலையைச் சுத்தம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பணியின் ஒப்பந்த வாகனமான தோஸ்த் வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு ஊழியா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது சேலத்தில் இருந்து நிலக்கோட்டை நோக்கி காய்கறி ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த வாகனம் தோஸ்த் வாகனம் மீது மோதி, நெடுஞ்சாலையில் பணியில் இருந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள கல்வாா்பட்டி ராமலிங்கம் மனைவி கலைச்செல்வி (37) மீதும் மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த காா் மீதும் மோதியது. இந்த விபத்தில் தோஸ்த் வாகன வாகன ஓட்டுநா், காய்கறி வாகன ஓட்டுநா் மதுசூதனன் ஆகியோா் லேசான காயமடைந்தனா். படுகாயமடைந்த கலைச்செல்வி கரூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.