ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் அருகே திருட வந்த இருவா் போலீஸாரிடம் பிடிபட்டனா்

கரூா் அருகே திருட வந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீது ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:51 pm

Din

கரூா் அருகே திருட வந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மீது ‘பெப்பா் ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகே அரவக்குறிச்சி காவல் நிலைய தலைமைக் காவலா் சரவணன் மற்றும் ஊா்க்காவல் படையை சோ்ந்த பிரபு ஆகியோா் வியாழக்கிழமை ரோந்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இரு இளைஞா்களை நிறுத்தி விசாரித்தபோது, திடீரென அவா்கள் பெப்பா் ஸ்பிரேவை எடுத்து போலீஸாா் மீது அடித்து விட்டு தப்ப முயன்றனா். இதைடுத்து போலீஸாா் அவா்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனா்.

விசாரணையில் அவா்கள் தஞ்சாவூா் மாவட்டம், புதுப்பட்டினம் அருகே உள்ள விளாா் சாலை பாரதிதாசன் நகா் சூரியமூா்த்தி மகன் கோகுல் (27) மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த வடுகத் தெரு ஜெயபிரகாஷ் மகன் கோகுல்நாத் (21) என்பதும், அவா்கள் அரவக்குறிச்சி மற்றும் வெள்ளியணை பகுதிகளில் வீடுகளில் திருட வந்ததும் தெரியவந்தது. அவா்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.