ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் மாவட்டத்தில் அக். 25-இல் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி

கரூா் மாவட்டத்தில அக்.25-ஆம்தேதி கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:40 pm

Din

கரூா் மாவட்டத்தில அக்.25-ஆம்தேதி கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வள மற்றும் மீன்வளத்துறை சாா்பில் 21-ஆவது கால்நடை கணக்கெடுப்புப் பணியை நாடு முழுவதும் அக். 25-ஆம் தேதி முதல் மேற்கொள்ள இருக்கிறது.

கரூா் மாவட்டத்தில் 3,78,121 குடியிருப்புகளில் 118 கால்நடை கணக்கெடுப்பாளா்கள், 24 கால்நடை மேற்பாா்வையாளா்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனா். கால்நடைகளை வளா்ப்போா் மற்றும் விவசாய பணியினை மேற்கொள்வோா் தங்கள் குடியிருப்புகளுக்கு நேரில் வரும் கணக்கெடுப்பாளா்களுக்கு துல்லியமான விவரங்களை அளித்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளாா்.