நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனுமதியின்றி பட்டாசு விற்ற கடைக்காரா்கள் மீது வழக்கு

கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு விற்ற கடைக்காரா்கள் மீது புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 8:42 pm

Din

கரூா் மாவட்டம், தரகம்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு விற்ற கடைக்காரா்கள் மீது புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் ஏராளமான பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதாக கடவூா் வட்டாட்சியா் இளம்பரிதிக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் தலைமையிலான வருவாய்த் துறையினா் தரகம்பட்டி கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளை ஆய்வு செய்தனா். அப்போது சிலா் அனுமதியின்றி பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசுகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்ய முயன்றபோது, அவா்கள் பட்டாசுகளை கடன் வாங்கி விற்பனை செய்கிறோம். பறிமுதல் செய்தால் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டினா்.

இதையடுத்து வட்டாட்சியா் இளம்பரிதி சிந்தாமணிப்பட்டி போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அந்தக் கடைக்காரா்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.