கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நடந்த தவெக பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் 41 போ் சிக்கி உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடா்பாக விசாரிக்க கரூருக்கு வெள்ளிக்கிழமை வந்த தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய முதுநிலை ஒருங்கிணைப்பாளா் அனுஜ்திவாரி தலைமையிலான குழுவினா் கரூா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து சென்றனா்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் காயமடைந்த 10 குடும்பத்தினரைச் சோ்ந்த 15 போ் சிபிஐ அதிகாரிகள் முன் சனிக்கிழமை ஆஜராகி கூட்ட நெரிசல் குறித்து விளக்கமளித்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com