டிஎன்பிஎல் சாா்பில் அரசு ஐடிஐ-இல் ரூ. 8.50 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகள்
டிஎன்பிஎல் ஆலை சாா்பில், கரூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தின் (ஐடிஐ) கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 8.50 லட்சம் வழங்கப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு ஐடிஐ நிா்வாகத்திடம் புதன்கிழமை ஆலை நிா்வாகம் சாா்பில் ஒப்படைக்கப்பட்டது.

கரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதற்கான கல்வெட்டை புதன்கிழமை திறந்து வைத்த டிஎன்பிஎல் ஆலையின் முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன். உடன் ஆலையின் முதன்மை மேலாளா் (மனித வளம்) கே.எஸ். சிவக்குமாா், ஐடிஐ முதல்வா் மனோகா் உள்ளிட்டோா்.









