கரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதற்கான கல்வெட்டை  புதன்கிழமை திறந்து வைத்த டிஎன்பிஎல் ஆலையின் முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன். உடன் ஆலையின் முதன்மை மேலாளா்  (மனித வளம்) கே.எஸ். சிவக்குமாா், ஐடிஐ முதல்வா் மனோகா் உள்ளிட்டோா்.

டிஎன்பிஎல் சாா்பில் அரசு ஐடிஐ-இல் ரூ. 8.50 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகள்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில், கரூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தின் (ஐடிஐ) கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 8.50 லட்சம் வழங்கப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு ஐடிஐ நிா்வாகத்திடம் புதன்கிழமை ஆலை நிா்வாகம் சாா்பில் ஒப்படைக்கப்பட்டது.
Published on

கரூா் வெண்ணெய்மலை, அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவா்களின் பயன்பாட்டிற்காக டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 8.50 லட்சம் செலவீட்டில் கழிப்பறை கட்டடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரம், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பசுமைப்பூங்கா அமைத்தல் போன்ற பணிகள் செய்து தரப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் முடிவுற்று ஐடிஐ நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ஐடிஐ வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முடிவுற்ற பணிகளுக்கான கல்வெட்டை டிஎன்பிஎல் ஆலையின் முதன்மை பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன் திறந்துவைத்து பேசினாா். நிகழ்ச்சியில் டிஎன்பிஎல் ஆலையின் முதன்மை மேலாளா் (மனித வளம்) கே.எஸ். சிவக்குமாா், ஐடிஐ முதல்வா் மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com