கரூர்
சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 38-வது வாா்டில் பாலாஜி காா்டன் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 38-வது வாா்டில் பாலாஜி காா்டன் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாநகராட்சி 38-வது வாா்டில் பாலாஜி காா்டனையும், தாந்தோணிமலை யூனியன் அலுவலகம்-திருச்சி சாலையை இணைக்கும் சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
