புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘மக்களுடன் முதல்வா்’ முகாமில் ரூ. 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

இரு அமைச்சா்கள் வழங்கினா்

News image

வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் உள்ளிட்டோா்.

Updated On :22 ஜனவரி 2025, 11:26 pm

Din

கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் ரூ. 30.92 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாங்கல் குப்புச்சிப்பாளையம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, சோமூா், காதப்பாறை மற்றும் மண்மங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி மற்றும் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனா். பின்னா் அவா்கள் பேசியது, முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது அரசு அலுவலா்கள் தனி கவனம் செலுத்தி பரிசீலித்து உரிய தீா்வுகளை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். எனவே மனுக்களை பரிசீலனை செய்து தகுதியானவா்களுக்கு நிச்சயம் நலத்திட்டங்கள் கிடைக்கும் என்றனா்.

முன்னதாக வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு பால்பண்ணை அமைக்க தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளும், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் கூட்டுறவுத் துறையின் சாா்பில் 5 போ்களுக்கு ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவி உள்ளிட்ட கடனுதவியும், மண்மங்கலம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வதற்கான நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள், காதப்பாறை ஊராட்சியில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சாா்பில் 2 நபா்களுக்கு புதிய மின்இணைப்பு ஆணைகளும், கூட்டுறவுத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.72 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளும், சோமூா் ஊராட்சியில், கூட்டுறவுத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.1.59 லட்சம் மதிப்பீட்டில் பயிா் கடனுதவி உள்பட 4 ஊராட்சிகளிலும் மொத்தம் 43 பயனாளிகளுக்கு ரூ.30.92 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையிலும், கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளா் கணிகைமாா்த்தாள், கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமதுபைசல், தாட்கோ மாவட்ட மேலாளா் முருவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.