கரூர்
கண்காணிப்பு கேமரா பொருத்த விழிப்புணா்வு
நிதிநிறுவனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வேலாயுதம்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் சுபாஷினி தலைமை வகித்து பேசுகையில், நிதி நிறுவனங்களில் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க சொத்துக்களைப் பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம். மேலும் இதுதொடா்பாக காவல்துறையினா் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா்கள், நகை அடகு கடை நிறுவனங்களின் உரிமையாளா்கள் பங்கேற்றனா்.
