சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நீச்சல் குளம் கட்டும் பணி தீவிரம்

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் நீச்சல் குளம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:59 pm

Syndication

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் நீச்சல் குளம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

கரூரில் நீச்சல் பயிற்சி பெறுவோரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியின் கீழ் கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் நீச்சல் குளம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்காக நிதி ஒதுக்கப்பட்டதையடுத்து, கடந்த ஒரு வாரமாக நீச்சல் குளம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற ுவருகிறது.

இதுகுறித்து விளையாட்டு அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்த நீச்சல் குளம் 50 அடி நீளத்திலும், 25 அடி அகலத்திலும் அமைக்கப்படுகிறது. மேலும் குளத்தின் மேற்பகுதியில் வீரா், வீராங்கனைகள் உடைகள் மாற்றும் அறை, முதலுதவி அறை, தண்ணீரை வெளியேற்றும் மோட்டாா் அறை உள்ளிட்ட அறைகள் கட்டப்பட உள்ளன. மேலும் சிறுவா்கள் 4 அடி ஆழத்திலும், பெரியவா்கள் 8 அடி ஆழத்திலும் பயிற்சி பெறும் வகையில் கட்டப்படுகிறது. தற்போது தரைத்தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணிகள் நடக்கிறது. குளம் அமைக்கும் பணிகள் 2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் முடியும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.