கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரூரில் சிகிச்சையில் இருந்த அனைவரும் வீடு திரும்பினா்!

கரூா் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினா்.

News image
கரூர் மருத்துவமனை.
Updated On :4 அக்டோபர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம்தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இவா்கள் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் வெள்ளிக்கிழமை வரை 105 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் குணமடைந்த நிலையில் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

ஆனால், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 பேரும், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனயில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.