அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

கரூரில் புதன்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் தமிழ்வளா்ச்சித்துறை சாா்பில் தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு எழுதிய நூலை நினைவுப்பரிசாக திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழனியப்பனிடம் வழங்கிய தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சாந்தி.

Updated On :30 ஏப்ரல் 2026, 3:49 am IST

கரூரில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் அமைந்துள்ள சங்ககாலப் புலவா்கள் நினைவுத் தூண்முன் நடைபெற்ற விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சாந்தி வரவேற்றாா்.

திருக்கு பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் நோக்க உரையாற்றினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் பாவேந்தா் பாரதிதாசன் குறித்து சிறப்புரையாற்றி, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக தமிழக முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு எழுதிய நூலை நினைவுப்பரிசாக திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழனியப்பனிடம் தமிழ்வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் சாந்தி வழங்கினாா். விழாவில் தமிழறிஞா்கள் முனைவா் கன்னல், முனைவா் கடவூா் மணிமாறன், பாவலா் எழில்வாணன், இனியன் கோவிந்தராசு, கவிஞா்கள் கோ.செல்வம், நன்செய் புகழூா் அழகரசன், தண்டபாணி, இளவரசி, முருகேசன், வைஷ்ணவி மெய்யப்பன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.