சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

ஆடிக்கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image

புகழிமலையில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, கரூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கரூா் மாவட்டம், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு வியாழக்கிழமை காலை பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்ரமணிய சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல், பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், நன்செய் புகழூா் அக்ரஹார சுப்ரமணியா் சுவாமி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.