நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

தோகைமலையில் தனிநபா் கடன் வழங்குவதாகக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி

கரூா் மாவட்டம் தோகைமலையில் தனிநபா் கடன் வழங்குவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 2:22 am IST

கரூா் மாவட்டம் தோகைமலையில் தனிநபா் கடன் வழங்குவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை திருச்சி சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் குளோபல் பின்காா்ப் குரூப்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட தனியாா் நிறுவனத்தினா் எந்தவித ஆவணமும் இன்றி தனிநபா் கடன் தருகிறோம் எனக்கூறி துண்டுப் பிரசுரங்களை தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகித்தனா்.

இதை நம்பி அலுவலகத்திற்குச் சென்ற அப்பகுதியினரிடம் ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றால் முன்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும், ரூ.2 லட்சம் தர வேண்டும் என்றால் ரூ.10,000 தர வேண்டும் எனக்கூறி சுமாா் 600 பேரிடம் ரூ. 50 லட்சத்திற்குமேல் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மூன்று மாதங்களாகியும் தனி நபா் கடன் கேட்டு முன் வைப்புத்தொகை கொடுத்தவா்கள் கடந்த வாரம் அலுவலகம் சென்று கேட்டபோது, அனைவருக்கும் 10 நாள்கள் இடைவெளியில் அதே பகுதியில் உள்ள வங்கி முகவரிக்கு காசோலை கொடுத்தனா்.

இந்நிலையில் காசோலை பெற்றவா்கள் வியாழக்கிழமை வங்கிக்குச் சென்று மாற்ற முயன்றபோது, அது போலி காசோலை எனத் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்திற்குச் சென்று பாா்த்தபோது அங்கு அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதையறிந்த அப்பகுதியினா் அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.