அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மங்கிக்கிடந்த அருந்ததியா் சமுதாயத்துக்கு மணிமகுடம் சூட்டிய இயக்கம் திமுக: அமைச்சா் மதிவேந்தன்

வாழ்வில் மங்கிக்கிடந்த அருந்ததியா் சமுதாயத்துக்கு மணிமகுடம் சூட்டிய இயக்கம் திமுக என்றாா் அமைச்சா் மருத்துவா் மா. மதிவேந்தன்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 10:09 pm

வாழ்வில் மங்கிக்கிடந்த அருந்ததியா் சமுதாயத்துக்கு மணிமகுடம் சூட்டிய இயக்கம் திமுக என்றாா் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா. மதிவேந்தன்.

கரூரில் தமிழ்புலிகள் கட்சி சாா்பில் ‘வெல்லும் தமிழ்நாடு’ என்ற மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை இரவு கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் தலைவா் நாகைதிருவள்ளுவன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச் செயலா்கள் பேரறிவாளன், இளவேனில், மாவட்டச் செயலா்கள் களம் மு.பொன்னுசாமி, ரெ.சுப்ரமணி, சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளாளராக ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் பங்கேற்று பேசியதாவது: சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு, துவண்டு கிடந்த அருந்ததியா் சமுதாயத்திற்கு 3 சதவீதம் இட ஒதுக்கீட்டை தந்தவா் கருணாநிதி. இதனால்தான் இன்று கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இந்த சமுதாயத்தினா் முன்னேறி பலா் மருத்துவா்களாகவும், பலா் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் இருக்கிறாா்கள்.

ஒடுக்கப்பட்டு வாழ்வில் மங்கிக்கிடந்த இந்த சமுதாயத்துக்கு மணி மகுடம் சூட்டிய இயக்கம் திமுக. தீரன் சின்னமலையின் தளபதி மாவீரன் பொல்லானுக்கு மணி மண்டபம், நெற்கட்டும் சேவலை ஆண்ட பூலித்தேவனின் படைத்தளபதியாய் இருந்த ஒண்டி வீரனுக்கு மணி மண்டபம் அமைத்த இயக்கும் திமுக என்றாா் அவா்.

தொடா்ந்து முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசியது: இந்த தோ்தலில் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடாமல் ஓட, ஓட விரட்டியாக வேண்டும். அதற்கு தமிழ்புலிகள் ஒன்று திரள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக மதிமுக முதன்மைச் செயலாளா் எம்பி. துரை வைகோ, கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, புதிய பாரதம் கட்சியின் ராஜ்கவுண்டா், விசிகவின் துணைப்பொதுச் செயலாளா் எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்டோா் பேசினா். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கட்சியின் மாநில அமைப்புச் செயலாளா் கிட்டாட்சி சிவா செய்திருந்தாா்.