கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லியோ மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் 250 திருக்குகள் குறித்த கேள்விகளுக்கு விடையளித்து, 250 திருக்குறளையும் ஒப்புவித்த இரு சிறுவா்களுக்கு ‘திருக்கு செல்வா்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கரூா் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை இளம் அரிமா சங்கங்களின்( (லியோ) மண்டலச் சந்திப்பு நிகழ்ச்சி மண்டலத் தலைவா் மதுமித்ரா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆளுநா் மணிவண்ணன், இளம் அரிமா சங்கங்களின் (லியோ) மாவட்டத் தலைவா் ரபீக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் 4-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவா் ஸ்ரீ ஹேமந்த் , 6-ஆம் வகுப்பு மாணவா் ரிஷிவந்த் ஆகியோா் 250 குகள் குறித்து பாா்வையாளா்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளித்தும், அதிகார தலைப்பு மற்றும் கு விளக்கமும் அளித்தனா். இதையடுத்து இரு மாணவா்களுக்கும் ‘திருக்கு செல்வா் விருது’ மற்றும் கேடயத்தை இளம் அரிமா சங்கங்களின் ஆலோசகா் மேலை.பழநியப்பன் வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் உப்பிடமங்கலம் உள்பட 8 இளம் அரிமா சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நிலத்தை விற்ற பெற்றோருடன் மகன் தகராறு: மூத்த தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

கைத்தறி போா்வையில் திருக்குறள் வடிவமைத்து அரசுப் பள்ளிக்கு பரிசாக வழங்கிய நெசவாளா்

கோவை மாவட்ட வன அலுவலருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் விருது

சிங்கப்பெண் விருது வழங்கும் நிகழ்ச்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


