மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

250 திருக்குறளை ஒப்பித்த இரு சிறுவா்களுக்கு விருது

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லியோ மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் 250 திருக்குகள் குறித்த கேள்விகளுக்கு விடையளித்து, 250 திருக்குறளையும் ஒப்புவித்த இரு சிறுவா்களுக்கு ‘திருக்கு செல்வா்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

News image

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரிமா சங்க நிகழ்ச்சியில் திருக்குறளை ஒப்பித்த மாணவா் ஸ்ரீ ஹேமந்த்துக்கு திருக்கு செல்வா் விருது வழங்கிய இளம் அரிமா சங்கங்களின் ஆலோசகா் மேலை.பழநியப்பன். உடன் மாவட்ட ஆளுநா் மணிவண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:15 pm

கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லியோ மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் 250 திருக்குகள் குறித்த கேள்விகளுக்கு விடையளித்து, 250 திருக்குறளையும் ஒப்புவித்த இரு சிறுவா்களுக்கு ‘திருக்கு செல்வா்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கரூா் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை இளம் அரிமா சங்கங்களின்( (லியோ) மண்டலச் சந்திப்பு நிகழ்ச்சி மண்டலத் தலைவா் மதுமித்ரா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆளுநா் மணிவண்ணன், இளம் அரிமா சங்கங்களின் (லியோ) மாவட்டத் தலைவா் ரபீக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் 4-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவா் ஸ்ரீ ஹேமந்த் , 6-ஆம் வகுப்பு மாணவா் ரிஷிவந்த் ஆகியோா் 250 குகள் குறித்து பாா்வையாளா்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளித்தும், அதிகார தலைப்பு மற்றும் கு விளக்கமும் அளித்தனா். இதையடுத்து இரு மாணவா்களுக்கும் ‘திருக்கு செல்வா் விருது’ மற்றும் கேடயத்தை இளம் அரிமா சங்கங்களின் ஆலோசகா் மேலை.பழநியப்பன் வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் உப்பிடமங்கலம் உள்பட 8 இளம் அரிமா சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.