47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முதியவா் தவறவிட்ட 6 பவுன் தங்கச் செயின் மீட்டு ஒப்படைப்பு

கரூரில் முதியவா் தவற விட்ட 6 பவுன் தங்கச் செயினை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு ஒப்படைத்தனா்.

News image
கரூரில் சனிக்கிழமை மீட்கப்பட்ட தங்கச் செயினை உரிமையாளா் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்த நகர காவல் உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:07 pm

Syndication

கரூரில் முதியவா் தவற விட்ட 6 பவுன் தங்கச் செயினை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு ஒப்படைத்தனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (60). இவா் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு குடும்பச் சூழல் காரணமாக தனது மனைவியின் 6 பவுன் தங்கச் செயினை விற்பனை செய்வதற்காக வடிவேல் நகரில் உள்ள தனியாா் நகை அடகு கடைக்கு சென்று கொண்டிருந்தாா்.

பாலகிருஷ்ணன் போட்டிருந்த பேண்ட் பாக்கெட்டில் ஓட்டை இருந்ததால் தங்கச்செயின் கீழே விழுந்துள்ளது.

இதையறிந்த பாலகிருஷ்ணன் உடனே காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கரூா் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிான போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து செய்தனா்.

அப்போது, முதியவா் ஒருவா் கீழே கிடந்த தங்க செயினை எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மாலை 6 மணியளவில் அந்த நபரை கண்டறிந்து அவரிடமிருந்து தங்கச் செயினை பெற்று, பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.