ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரூரில் காய்கறி வியாபாரிகளிடம் மஞ்சப் பைகள் வழங்கி விழிப்புணா்வு

வெங்கமேட்டில் புதன்கிழமை காய்கறி வியாபாரிக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:45 pm

Syndication

கரூரில் காய்கறி வியாபாரிகளிடம் மஞ்சப்பைகளை வழங்கி நெகிழி ஒழிப்பு குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கரூரில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வெங்கமேடு காய்கறிச் சந்தையில் காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா் சத்யன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஊழியா்கள், காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நெகிழி பைகளின் தீமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினா். தொடா்ந்து தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.