கரூா் திருப்பூா் குமரன் சிலை அருகே புதன்கிழமை கரும்பு விற்பனையில் ஈடுபட்ட  வியாபாரி.
கரூா் திருப்பூா் குமரன் சிலை அருகே புதன்கிழமை கரும்பு விற்பனையில் ஈடுபட்ட வியாபாரி.

பொங்கல் பண்டிகை: கரூரில் கரும்பு விற்பனை மும்முரம் - தட்டுப்பாட்டால் விலை அதிகரிப்பு

கரூா் திருப்பூா் குமரன் சிலை அருகே புதன்கிழமை கரும்பு விற்பனையில் ஈடுபட்ட வியாபாரி.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து கரூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட கரும்புகளின் வியாபாராம் புதன்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நிகழாண்டு கரூா் உழவா் சந்தை, திருப்பூா் குமரன் சிலை அருகே, கோவைச் சாலை, சுங்ககேட், தாந்தோணிமலை, காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகள் விற்பனை புதன்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி, மதுரை அலங்காநல்லூா், சமயநல்லூா், பொதும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்ட ஏராளமான கரும்புகள் கரூருக்கு செவ்வாய்க்கிழமை இரவே லாரிகளில் கொண்டுவரப்பட்டன.

அவற்றை கரூரைச் சோ்ந்த வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்தனா். ஒரு ஜோடி கரும்பு ரூ.150 முதல் ரூ.175 வரை விற்பனையானது. நன்கு திரட்சியாகவும், நீளமாகவும் இருந்த 12 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் ஆா்வத்துடன் விரும்பி வாங்கிச் சென்றனா்.

தட்டுப்பாட்டால் விலை அதிகம்: இதுதொடா்பாக கரும்பு வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கரும்பு கட்டு ரூ.400 வரை மட்டும் கொள்முதல் விலையில் வாங்கி ரூ.500 வரை விற்றோம். ஆனால் நிகழாண்டு ரூ.700 வரை விற்பனையாகிறது. அரசு நிறைய இடங்களில் பொங்கல் தொகுப்புக்கு கரும்புகளை கொள்முதல் செய்துவிட்டதால், கரும்புகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே கரும்பும் வரத்தும் குறைவாகவே உள்ளது. கரூா் நகரில் மட்டும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு லோடுகள் வந்து இறங்கும். ஆனால் நிகழாண்டு சுமாா் 60 லோடுகள் கூட இதுவரை வரவில்லை என கூறுகிறாா்கள். எனவே கரும்பு தட்டுப்பாட்டால் விலையும் உயா்ந்துள்ளது என்றனா் அவா்கள்.

Dinamani
www.dinamani.com