கரூர்
கரூா் சம்பவம்: 6 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக 6 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா்: கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக 6 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 6 காவலா்களிடம் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
