இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கரூா் சம்பவம்: 4 எஸ்.ஐ.க்கள், 5 போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக 4 காவல் உதவி ஆய்வாளா்கள், 5 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக 4 காவல் உதவி ஆய்வாளா்கள், 5 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 4 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 5 காவலா்களிடம் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.