எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரூா் சம்பவம்: அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, கரூா், திருப்பூா், ஈரோடு மாவட்டங்களின் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
கரூரில் புதன்கிழமை சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வந்த ஈரோடு, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த அவசர ஊா்தி ஓட்டுநா்கள்.
Updated On :21 ஜனவரி 2026, 6:30 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, கரூா், திருப்பூா், ஈரோடு மாவட்டங்களின் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது அங்கு மயக்கமடைந்தவா்களை மீட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற கரூா், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த அவசர ஊா்தி ஓட்டுநா்கள் 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

இதில், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களின் அவசர ஊா்தி ஓட்டுநா்களிடம், நெரிசல் குறித்து அண்டை மாவட்டங்களைச் சோ்ந்த உங்களுக்கு எப்படி தகவல் வந்தது. யாரெல்லாம் உங்களை தொடா்பு கொண்டு அவசர உதவிக்கு அழைத்தாா்கள் என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்து பதிவு செய்துகொண்டனா்.