வேலுச்சாமிபுரlத்தில் சிபிஐ அதிகாரிகள்.
வேலுச்சாமிபுரlத்தில் சிபிஐ அதிகாரிகள்.கோப்புப்படம்.

கரூா் சம்பவம்: 2 காவலா்கள் அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, 2 காவலா்கள் மற்றும் ஒரு அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
Published on

கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக, 2 காவலா்கள் மற்றும் ஒரு அவசர ஊா்தி ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த 2 காவலா்கள் மற்றும் ஒரு அவசர ஊா்தி ஓட்டுநா் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com