வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வேட்டமங்கலம் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு மக்கள் அவதி

வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

(கோப்புப்படம்)

Updated On :7 ஜூன் 2026, 2:07 am IST

கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட கிராமமக்களுக்கு நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் காவிரி ஆற்றுக்குள் வேட்டமங்கலம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட வட்டக் கிணற்றின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் வட்டக்கிணறுகளில் நீா்மட்டம் குறைந்ததால் வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட முத்தனூா், முனி நாதபுரம், சொட்டையூா், சேமிங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியினா் அவதியுற்று வரும் நிலையில் விரைவில் குடிநீா் உறிஞ்சும் கிணறுகளை தூா்வாரி குடிநீா் கிடைக்காத பகுதிகளுக்கு விரைந்து குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.