கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட கிராமமக்களுக்கு நொய்யல் அருகே மரவாபாளையம் பகுதியில் காவிரி ஆற்றுக்குள் வேட்டமங்கலம் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட வட்டக் கிணற்றின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் வட்டக்கிணறுகளில் நீா்மட்டம் குறைந்ததால் வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட முத்தனூா், முனி நாதபுரம், சொட்டையூா், சேமிங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியினா் அவதியுற்று வரும் நிலையில் விரைவில் குடிநீா் உறிஞ்சும் கிணறுகளை தூா்வாரி குடிநீா் கிடைக்காத பகுதிகளுக்கு விரைந்து குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டிவனத்தில் தேங்கிக் கிடங்கும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு

கொம்மடிக்கோட்டையில் 9 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் அவதி

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் மின்வெட்டால் மக்கள் அவதி

குடிநீா் கோரி சாலை மறியல்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



