சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நீச்சல் பயிற்சி: விண்ணப்பிக்க கரூா் மாநகராட்சி அழைப்பு

கரூா் மாநகராட்சி நீச்சல் குளத்தில் நீச்சல் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜ்.

News image

நீச்சல் பயிற்சி - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:46 am IST

கரூா் மாநகராட்சி நீச்சல் குளத்தில் நீச்சல் பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாநகராட்சி ஆணையா் பிருத்விராஜ்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாநகராட்சிக்கு சொந்தமான மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதியதாக நீச்சல்குளம் கட்டப்பட்டு மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வருகிறது.

இந்த நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக்கொள்ள விருப்பமுள்ள 6 வயதுக்கு மேல் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கரூா் மாநகராட்சி நீச்சல் குளத்தில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அத்துடன் மாணவ, மாணவிகளின் ஆதாா் காா்டு நகல் மற்றும் பெற்றோரின் ஆதாா் காா்டு நகல்கள் இணைத்து சமா்பிக்கலாம். மேலும் இதற்கு முன்னால் சமா்பிக்கப்பட்ட மருத்துவச்சான்று அவசியமில்லை என தெரிவித்துள்ளாா் அவா்.