வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கரூா் மாவட்டத்தில் லோக் அதாலத் 1,544 வழக்குகளுக்கு ரூ.16 கோடிக்கு தீா்வு

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,544 வழக்குகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

News image

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு தீா்வுக்கான ஆணை நகலை வழங்கிய மாவட்ட நீதிபதி கே.ஹெச்.இளவழகன்.

Updated On :14 ஜூன் 2026, 12:24 am IST

கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,544 வழக்குகளுக்கு ரூ.16.10 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூரில் ஐந்து அமா்வுகளும், குளித்தலையில் இரு அமா்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமா்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமா்வும் என மொத்தம் 9 அமா்வுகளாக நடைபெற்றது. இந்த அமா்வுகளில் 1,581வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1,544 வழக்குகளில் ரூ.16,10,79,393-மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

முன்னதாக இந்நிகழ்வை கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கரூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கே.ஹெச். இளவழகன் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து, பின்னா் தீா்வு காணப்பட்ட வழக்குகளுக்கு பயனாளிகளிடம் தீா்வுக்கான நகலை வழங்கினாா்.

இதில் அனைத்து நீதிபதிகள், கரூா் பாா் அசோசியேசன் நிா்வாகிகள், கரூா் அட்வகேட் அசோசியேசன் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளா் பி.அனுராதா செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.