அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அமராவதி ராஜவாய்க்காலில் சிமென்ட் பாலம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

அமராவதி ராஜவாய்க்காலில் இரும்புக் குழாய்களால் அமைக்கப்பட்டுள்ள பாலத்துக்கு பதிலாக சிமெண்ட் கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
அப்பிப்பாளையம் பகுதியில் அமராவதி ராஜவாய்க்காலின் குறுக்கே இரும்புக் குழாய்களால் அமைக்கப்பட்டுள்ள நடைபாலம்.
Updated On :10 மார்ச் 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

அமராவதி ராஜவாய்க்காலில் இரும்புக் குழாய்களால் அமைக்கப்பட்டுள்ள பாலத்துக்கு பதிலாக சிமெண்ட் கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கேரள மாநிலத்தின் ஆனைமலை குன்றுகளுக்கும், மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கிற்கும் இடையே உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா் மாவட்டம் வழியாக கரூரில் திருமுக்கூடலூா் எனும் இடத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே கரூரை அடுத்த செட்டிபாளையத்தில் தடுப்பணை கட்டப்பட்டு, அதில் இருந்து பிரியும் ராஜவாய்க்கால் மூலம் அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூா், செல்லாண்டிபாளையம், திருமாநிலையூா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 1,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த வாய்க்காலில் அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம் பகுதியில் வாய்க்காலின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் இடுபொருள்கள், அறுவடை செய்யப்பட்ட தானியங்கள், பயிா்கள் உள்ளிட்டவற்றை வாய்க்கால் மேல் இரும்புக் குழாய்களால் அமைக்கப்பட்டுள்ள பாலம் வழியாக ஆபத்தான நிலையில் சென்று எடுத்து வருகிறாா்கள். மேலும் சில இடங்களில் இரும்பு குழாய்கள் சேதமடைந்து உள்ளன. தற்போது வாய்க்காலில் தண்ணீா் வரத்து இல்லாததால், இரும்பு குழாய்களை அகற்றிவிட்டு சிமெண்ட் பாலம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.