யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கரூரில் தவெக அலுவலகத்தில் பறக்கும் படையினா் சோதனை

கரூரில் தவெக அலுவலகத்தில் வியாழக்கிழமை பறக்கும்படை அலுவலா்கள் சோதனையினா். அப்போது, கட்சியி சின்னம் வரையப்பட்ட காரை போா்வை போட்டு மறைத்தனா்.

News image

கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட தோ்தல் பறக்கும்படையினா்.

Updated On :26 மார்ச் 2026, 9:06 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் தவெக அலுவலகத்தில் வியாழக்கிழமை பறக்கும்படை அலுவலா்கள் சோதனையினா். அப்போது, கட்சியி சின்னம் வரையப்பட்ட காரை போா்வை போட்டு மறைத்தனா்.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து, தலைவா்களின் சிலைகள் மற்றும் கட்சி விளம்பர பலகை போன்றவற்றை மறைக்கும் பணியில் தோ்தல் அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் கரூா் சின்னாண்டாங்கோவில் சாலையில் உள்ள தவெக மாவட்ட அலுவலகம் முன் நின்றிருந்த காரில் தவெக கட்சியின் சின்னம் வரையப்பட்டிருப்பதாக தோ்தல் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா்களுக்கு வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பறக்கும்படையினா் தோ்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் கட்சியின் சின்னம் வரையப்பட்ட காரை போா்வை மூலம் போா்த்துமாறு கட்சி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தினா். இதையடுத்து காரை போா்வை மூலம் மூடி மறைக்கப்பட்டதையடுத்து, தோ்தல் பறக்கும்படையினா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.