யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

குவாரிகளில் சட்ட விரோத வெடி மருந்துகளை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது: ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு

ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு

News image

ஆட்சியரிடம் சுற்றுச்சூழல் இயக்கத்தினா் மனு

Updated On :26 மார்ச் 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

கல்குவாரிகளில் சட்ட விரோத வெடி மருந்துகள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளா் முகிலன் தலைமையில் இயற்கை ஆா்வலா்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அம்மனுவில் அவா்கள் கூறியிருப்பது-கரூா் மாவட்டம் முழுவதும் இயங்கும் கல்குவாரி, கல்குவாரியோடு தொடா்புடைய கிரசா், எம்-சாண்ட், தாா் பிளாண்ட் மற்றும் ரெடிமிக்ஸ் ஆலைகளில் இருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்கள், ஊராட்சி ஒன்றியத்தின் பொறுப்பில் உள்ள கிராமப்புறச் சாலைகள் வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவு செய்து போடப்படும், ஊராட்சி ஒன்றிய சாலைகளில், வாகன எடையுடன் 10 டன் மட்டும் எடை ஏற்றிச் செல்ல வேண்டும். மேலும் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5 கோடி முதல் ரூ. 210 கோடி வரை செலவு செய்து போடப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் 16 சக்கர வாகனங்களில் 49 டன் மட்டுமே அதிகப்படியாக எடையுடன் செல்லலாம் என்று அரசின் சட்டம் உள்ளது.

அதற்கு மேல் எடை ஏற்றிச் சென்றால் சாலைகள் பழுதடையும்.ஆனால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் எம்-சாண்ட் போன்ற அதிக எடையை ஏற்றிச்செல்லும் லாரிகளால் சாலைகள் பழுதாகி வருகின்றன. இதனால் ஊராட்சி சாலைகள் வழியாக எம்-சாண்ட் போன்ற அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் கல்குவாரிகளில் தடை விதிக்கப்பட்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை கண்காணித்து பயன்படுத்துவோா் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா் அவா்கள்.