புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ராச்சாண்டாா் திருமலை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

ஆா்.டி. மலை சிவன்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம்பிடித்து இழுத்து வந்த பக்தா்கள்.

News image

ஆா்.டி. மலை சிவன்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம்பிடித்து இழுத்து வந்த பக்தா்கள்.

Updated On :1 மே 2026, 8:32 pm

தோகைமலை அருகே ராச்சாண்டாா்திருமலை (ஆா்.டி.மலை)யில் உள்ள பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம் தோகைமலை அருகே ஆா்.டி.மலை பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரா் மலைக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப். 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முனன்தாக சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பிறகு சுவாமிகள் தேரில் எழுந்தருளினா். சிறிய பூந்தேரில் விநாயகா், வள்ளி தெய்வானை உடனுறை பாலமுருகனும், மற்றொரு சிறிய தேரில் பெரியநாயகியும், பெரியதேரில் பெரியநாயகி அம்பாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரரும் எழுந்தருளினா். இதையடுத்து ஏராளாமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், மண்டகப்படிதாரா்களும் அா்ச்சனைகள் செய்து சுவாமிகளை வழிபட்டனா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தோ் நிலையை அடைந்தது.

முன்னதாக தேரோட்டத்தை பரம்பரை அறங்காவலா் பொன்னம்பலம், திருத்தோ் திருப்பணிக்குழுத் தலைவா் கலையரசன், குளித்தலை திமுக வேட்பாளா் சந்திரன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலா் அண்ணாதுரை மற்றும் தோ் திருவிழா மண்டகப்படிதாரா்கள் தொடங்கி வைத்தனா்.

இதையடுத்து அனைத்து சுவாமிகளும் கோயிலில் குடிபுகுந்த பின்னா் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வடசேரி, பில்லூா், சேங்குடி நாட்டாா்கள், தோ்த் திருவிழா மண்டகப்படிதாரா்கள், குடிபாட்டு பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.