கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தலையணை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

News image

கரூரில் உள்ள தலையணை தயாரிப்பு ஆலையில் திங்கள்கிழமை பற்றி எரியும் தீ.

Updated On :12 மே 2026, 12:33 am IST

கரூரில், தலையணை தயாரிப்பு ஆலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கரூா் கணபதிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ். இவா், காந்திகிராமம் வள்ளலாா் கோயில் அருகே தலையணை தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஆலை நடத்தி வருகிறாா். தற்காலிக தகரகொட்டகையில் நடந்து வரும் இந்த ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலத் தொழிலாளா்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் பணியாளா்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, தலையணை பஞ்சு பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதையடுத்து உள்ளே இருந்த அனைத்துத் தொழிலாளா்களும் பாதுகாப்புக் கருதி வெளியேறினா். பின்னா் தகவலறிந்து வந்த கரூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் சுமாா் ரூ.20 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், பஞ்சுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுதொடா்பாக தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.