தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
கரூா் மாவட்டம், வடசேரி பெரிய ஏரியில் 100-க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வசிக்கின்றன. இதேபோல தோகைமலைக்கு அருகே உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறை வனச் சரகத்துக்குள்பட்ட வீரமலை காப்புக்காட்டிலும் ஏராளமான புள்ளிமான்கள் வசிக்கின்றன.
தற்போது, வீரமலை காப்புக்காடு பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வெள்ளிக்கிழமை இரவு 2 வயது உடைய புள்ளிமான் ஒன்று வனத்தை விட்டு வெளியேறி நாகனூா் ஊராட்சிக்குள்பட்ட போஜாநாயக்கன்பட்டி பகுதிக்கு வந்தது.
அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த அழகுதுரை என்பவருக்குச் சொந்தமான தண்ணீா் இல்லாத விவசாய கிணற்றில் மான் தவறி விழுந்தது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே மணப்பாறை தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அலுவலா்களுக்கு தகவல்அளித்தனா்.
தகவலறிந்த வனவா் ஈஸ்வரி, வனக் காப்பாளா் முருகேசன் ஆகியோா் நேரில் சென்று மானை பாா்வையிட்டனா். பின்னா், மணப்பாறை தீயணைப்புத்துறையினா் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனா். இதையடுத்து மீட்கப்பட்ட மானை கடவூா் அருகே வையமலைபாளையம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் விட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

மணப்பாறை அருகே கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகள் பலி; 2 கன்றுகள் மீட்பு!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

