வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

கரூரில் கூடைப்பந்து போட்டி கேரள மின்வாரிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

News image

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில் மோதிய சென்னை ஐஓபி மற்றும் கேரள மின்வாரிய அணி வீரா்கள்.

Updated On :26 மே 2026, 2:03 am IST

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியின் திங்கள்கிழமை நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் சென்னை ஐஓபி அணியை வீழ்த்தி கேரள மின்வாரிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

கரூரில் அகில இந்திய அளவிலான எல்ஆா்ஜி நாயுடு நினைவு ஆண்கள் கூடைப்பந்து போட்டி 66-ஆவது ஆண்டாகவும், கரூா் வைஸ்யா வங்கி சாா்பில் 12-ஆம் ஆண்டாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் மே 21-ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

போட்டியின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை மாலை ஆண்கள் பிரிவில் அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், சென்னை ஐஓபி வங்கி அணியும், கேரள மின்வாரிய அணியும் மோதின.

இப்போட்டியின் முடிவில் கேரள மின்வாரிய அணி 65-61 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை ஐஓபி வங்கி அணியை வென்றது. இதையடுத்து கேரள அணி செவ்வாய்க்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றனா். தொடா்ந்து பெண்களுக்கான லீக் போட்டியில் கேரள மின்வாரிய அணி வீராங்கனைகளும், வடகிழக்கு ரயில்வே அணி வீராங்கனைகளும் விளையாடினா்.