இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கரூர: ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் 4 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு

கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் 4 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

News image

பள்ளமருதபட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் நாற்றுப் பண்ணையை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

Updated On :28 மே 2026, 3:17 am IST

கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறையின் மூலம் 4 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன்.

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 75.20 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியது: தமிழக அரசு பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் உரிய காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்திடும் வகையில் தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பவித்திரம் ஊராட்சி, பவித்திரம் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும், பள்ளமருதபட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3 மரக்கன்று நாற்றுப் பண்ணைகளையும்,

புன்னம் ஊராட்சி, நடுப்பளையத்தில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் ரூ. 75.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றும் வருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கரூா் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக உருவாக்கிட மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் நிகழாண்டு 2026 -27-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 4 லட்சம் மரக்கன்றுகள் ரூ.4.99 கோடி மதிப்பீட்டில் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது என்றாா் அவா்.

தொடா்ந்து , எலவனுா் நியாயவிலைக்கடையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தரம் மற்றும் எடை குறித்து மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.