கிராமப்புற நூலகங்கள் வாயிலாக அறிவாா்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும்
கிராமப்புற நூலகங்கள் வாயிலாக அறிவாா்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி.

கரூா் மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குரூப்-4 மாதிரி தோ்வை தொடங்கி வைத்து, சிறந்த நூலக வாசக மாணவருக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி. உடன் (இடமிருந்து) வாசகா் வட்டத்தலைவா் தீபம் உ.சங்கா், பரணிபாா்க் கல்விக்குழுமத் தலைவரும், முதன்மை முதல்வருமான முனைவா் செ.ராமசுப்ரமணியன், மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா், கரூா் வருமானவரித் துறை ஆய்வாளா் மு. காா்த்திக்.
கிராமப்புற நூலகங்கள் வாயிலாக அறிவாா்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி.
தேசிய நூலக வார நிறைவு விழா மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரி தோ்வு ஆகியன கரூா் மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் ச.பிரசன்னா ராமசாமி பங்கேற்று, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரித் தோ்வை தொடங்கி வைத்து சிறந்த நூலக வாசக மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பேசியதாவது: நூலகங்கள் அமைதியாக இருப்பதற்கான காரணம், அங்கு நாம் புத்தகங்களோடு பேச வேண்டும் என்பதே ஆகும். இந்த அமைதியே நமது நூலகங்களில் ஒரு புரட்சிகரமான அமைதிப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கரூா் நகரப் பகுதி மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் உள்ள மாணவா்களையும் அதிகம் படிக்க வைக்க வேண்டும். சமூகம் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்கும் மையமாகவும், அறிவாா்ந்த சமுதாயத்தை உருவாக்கும் இடமாகவும் நூலகங்கள் செயல்பட வேண்டும்.
கிராமப்புற நூலகங்கள் திறக்கப்படுவதோடு, அங்குள்ள மாணவா்களும் இளைஞா்களும் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கரூா் வருமானவரித் துறை ஆய்வாளா் மு. காா்த்திக், பரணி பாா்க் கல்விக் குழுமத் தலைவரும், முதன்மை முதல்வருமான முனைவா் சொ. ராமசுப்ரமணியன், வாசகா் வட்டத் தலைவா் தீபம் உ. சங்கா், முதல்நிலை நூலகா் ந. அபிராம சுந்தரி, நூலகா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

