ரோந்து காவலரைத் தாக்கிய ஒடிசா இளைஞா்கள் 3 போ் கைது
தென்னிலை அருகே ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலைக் காவலரை தாக்கிய ஒடிசா மாநில இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கைது
தென்னிலை அருகே ரோந்துபணியில் ஈடுபட்டிருந்த முதல்நிலைக் காவலரை தாக்கிய ஒடிசா மாநில இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த தென்னிலை காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றுபவா் கணேசன்(34). இவா், சக காவலா்களுடன் வியாழக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் தென்னிலை அடுத்த நல்லிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள மதுக்கடை அருகே மதுபோதையில் நின்று கொண்டிருந்த வடமாநில இளைஞா்கள் 5 பேரிடம் கணேசன் விசாரணை நடத்தினாா். அப்போது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வடமாநில இளைஞா்கள் 5 பேரும் சோ்ந்து, காவலா் கணேசனை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த கணேசனை, சக காவலா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுதொடா்பாக, தென்னிலை காவல் உதவி ஆய்வாளா் கந்தசாமி வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில் காவலா் கணேசனை தாக்கியவா்கள் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ரவீந்திரகாடியா(21), சகாதேவ்பாரிக்(26), குட்சேக்நாயக்(24), உத்தவ்குமாா் காடியா(21), ஷேக்தா்(24) ஆகிய 5 போ் எனத் தெரியவந்தது. மேலும் அவா்கள் நல்லிபாளையம் அருகே தனியாா் காற்றாலை அமைக்கும் நிறுவனத்தில் தங்கி அங்கு பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை அந்த காற்றாலை நிறுவனத்தில் பதுங்கியிருந்த ரவீந்திரகாடியா, சகாதேவ்பாரிக், குட்சேக்நாயக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். பிறகு 3 பேரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் தப்பியோடிய உத்தவ்குமாா் காடியா, ஷேக்தா் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



