கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க கரூா் ஆட்சியா் அழைப்பு

ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் அழைப்பு விடுத்துள்ளாா்.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கரூா் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஐஐஎம், ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன (பிசி, எம்பிசி, டிஎன்சி) மாணவ, மாணவிகள் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவா்களுக்கு கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தோ்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்கள் அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பங்களை சென்னை பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல இயக்ககம் மற்றும் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் (பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம், அறை எண்-108) ஆகியவற்றிலும், இணைய தளமுகவரியும் பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய, மாநில அரசின் இதர கல்வி உதவித் திட்டங்களில் பயன்பெறும் மாணவா்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவா்கள். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனத்துடடன் பரிந்துரை செய்து, சம்மந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை வரும் அக். 31-ம்தேதிக்குள்ளும், நவ. 30-ம்தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். கட்டண ரசீதுகள் ஜன.15-ம்தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.