அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்த அழைப்பு

: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் பள்ளிசெல்லா இடைநின்ற குழந்தைகளுக்கு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்த, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

Updated On :12 மே 2013, 6:16 am IST

: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் பள்ளிசெல்லா இடைநின்ற குழந்தைகளுக்கு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்த, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்துவதற்கு 3 ஆண்டுகள் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளுக்கு பணியாற்றிய, விருப்பமுள்ள, தகுதியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் பெரம்பலூர் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் மே 13 -ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. உரிய இணைப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்டத் திட்ட அலுவலகத்துக்கு மே 22 -ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மத்திய, மாநில சட்டத்தின் கீழ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.  பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளுக்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்  திட்டத்தில் பணிபுரியும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், 3 ஆண்டுகள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கல்விக் குழுத் தலைவரிடமிருந்து (மாவட்ட ஆட்சியர்) விண்ணப்பங்கள் ஒப்புதல் பெறப்பட்டு, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு இறுதி செய்த பட்டியல் அனுப்பப்பட்டு, தகுதிகள் சரிபார்த்து அறிக்கை வழங்கப்படும்.

பின்னர், தேர்வு செய்யப்பட்ட அரச சாரா தொண்டு நிறுவனத்துக்கு உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.